வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏப்ரல் (2026) மாதத்தில், நாட்டின் மொத்த விலை குறியீட்டு எண் நேர்மறையாக உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAY 2026 12:00PM by PIB Chennai

நாட்டின் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட (அடிப்படை ஆண்டு: 2011-12) வருடாந்திர பணவீக்க விகிதம், 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் (2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில்) 8.3 சதவீதமாகப் (தற்காலிகம்) பதிவாகியுள்ளது. 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்க விகிதம் நேர்மறையாக இருப்பதற்கு, கனிம எண்ணெய், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, உலோகங்கள், பிற உற்பத்தி மற்றும் உணவு அல்லாத பொருட்கள் ஆகியவற்றின் விலையேற்றமே முதன்மையான காரணமாகும்.

2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டில், மாதந்தோறும் ஏற்பட்ட மாற்றம் 3.86 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

மொத்த விலை குறியீட்டின் முக்கியப் பிரிவுகளில் மாதந்தோறும் ஏற்பட்டுள்ள மாற்றம்

முதன்மைப் பொருட்கள் (எடையளவு 22.62%): இப்பிரிவிற்கான குறியீட்டு எண், மார்ச் 2026-ல் 197.3 ஆக (தற்காலிகம்) இருந்த நிலையில், ஏப்ரல் 2026-ல் 2.58% உயர்ந்து 202.4 ஆக (தற்காலிகம்) அதிகரித்துள்ளது.  2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (16.42%), உணவுப் பொருட்கள் (1.41%), கனிமங்கள் (0.91%) ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. அதேவேளையில், உணவு அல்லாத பொருட்களின் விலை (0.94%) குறைந்துள்ளது.

*எரிபொருள் மற்றும் மின்சக்தி (எடையளவு 13.15%) இப்பிரிவிற்கான குறியீட்டு எண், 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 153.7-மாக (தற்காலிகம்) இருந்த நிலையில், 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 18.22%-ம் உயர்ந்து 181.7-ஆக (தற்காலிகம்) அதிகரித்துள்ளது. மார்ச் 2026-உடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்தில், கனிம எண்ணெய்களின் விலை (29.37%) உயர்ந்துள்ளது. அதேவேளையில், மின்சாரத்தின் விலை (-2.53%) குறைந்துள்ளது.

உற்பத்திப் பொருட்கள் (எடையளவு 64.23%) இப்பிரிவிற்கான குறியீட்டு எண், மார்ச் மாதம் 149.5-ஆக (தற்காலிகம்) இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 1.40%-ஆக உயர்ந்து 151.6-ஆக (தற்காலிகம்) அதிகரித்துள்ளது. விலைகளில் மாதந்தோறும் அதிகரித்துள்ள சில முக்கியக் குழுக்கள்: அடிப்படை உலோக உற்பத்தி, இரசாயனங்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள், ஜவுளி, உணவுப் பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவை ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260905&reg=3&lang=1

***

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261147) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR