பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இலங்கை நாட்டின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி சரோஜ் சாவித்திரி பவுல்ராஜ் மற்றும் இலங்கை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவியை சந்தித்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAY 2026 6:08PM by PIB Chennai

இந்தியா வருகை தந்த இலங்கை நாட்டின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி சரோஜ் சாவித்திரி பவுல்ராஜ் மற்றும் இலங்கை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவியை சந்தித்தனர்.

புதுதில்லியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. அமைச்சகம் சார்பில் இலங்கை பிரதிநிதிகளுக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவதையொட்டி, இந்தியா மற்றும் இலங்கையின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இப்பயணம் பிரதிபலிக்கிறது.

மகளிர் தலைமையிலான வளர்ச்சி, பாலின சமத்துவம், குழந்தைகள் நலன், நிர்வாகத்தில் மகளிர் தலைமைத்துவம் ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது, ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இச்சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது. மிஷன் சக்தி, மிஷன் வாத்சாலியா, மிஷன் சாக்‌ஷாம் அங்கன்வாடி மற்றும் போஷான் 2.0 உள்ளிட்ட மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முக்கிய முன்முயற்சிகள் மற்றும் மாற்றத்தக்க திட்டங்களுக்கு இலங்கைப் பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்தனர். மகளிர் பாதுகாப்பு, அதிகாரமளித்தல், ஊட்டச்சத்து மற்றும் நலவாழ்வு தொடர்பான சேவையை மேம்படுத்துவதற்கு டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான முறைகளைப் பயன்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260772&reg=3&lang=2

***

SS/IR/RJ/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2261021) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati