வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – சிலி இடையே பொருளாதாரம் மற்றும் வர்த்தக மேம்பாட்டு பேச்சுக்கள் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 13 MAY 2026 4:55PM by PIB Chennai

இந்தியா – சிலி இடையே பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இருதரப்பு பேச்சுக்களில் ஈடுபடுவதற்காக சிலி வெளியுறவு அமைச்சர் திரு ஃபிரான்சிஸ்கோ பெரஸ் மெக்கன்னா தலைமையிலான  உயர்நிலைக் குழுவினர் இந்தியா வந்துள்ளனர்.

இருதரப்ப வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் சிலி வெளியுறவு அமைச்சர் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலுடன் விவாதித்தார்.

இந்தியா  - சிலி இடையே நிலவும் பொருளாதார நட்புறவுகளில் ஏற்பட்டுள்ள சீரான வளர்ச்சியை இருதரப்பினரும் குறிப்பிட்டதோடு இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தங்களுடைய பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்தியா – சிலி இடையே விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் குறித்த பேச்சுக்கள் நடைபெற்றது.

மத்திய வர்த்தகத் துறை செயலாளரும் சிலியின் சர்வதேச பொருளாதார உறவுகளின் துணை அமைச்சர் திருமதி பௌலா எஸ்டேவெசுடன்  பேச்சு நடத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260707&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2260819) आगंतुक पटल : 51
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Telugu