மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ஆயுஷ்மான் பாரத் இயக்கத்தின் தானியங்கத் தீர்வுகள் பயன்பாடு தொடர்பான ஹேக்கத்தானில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAY 2026 2:11PM by PIB Chennai
பொது சுகாதாரக் காப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான இரண்டு நாள் தேசியக் கண்காட்சி பெங்களூருவில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவை இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கம், தேசிய சுகாதார ஆணையம், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து மே 9, 2026 அன்று நடத்தின. அதில், ஆயுஷ்மான் பாரத் தானியங்கத் தீர்வு ஹேக்கத்தானில் வெற்றி பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த ஹேக்கத்தான், காப்பீட்டு உரிமைகோரல் தீர்ப்பளிப்பில் வேகம், வெளிப்படைத்தன்மை, துல்லியத்தை மேம்படுத்துவது ஆகயவற்றை வலுப்படுத்துவதற்கான தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது.
ஹேக்கத்தானில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்வுகள் எதிர்காலச் செயல்பாட்டிற்காகப் பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260583®=3&lang=1
----
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2260810)
வருகையாளர் எண்ணிக்கை : 3