பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சவால்களை எதிர்கொள்வதற்கான துணிச்சல் மற்றும் மனஉறுதியின் வலிமையை  எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 MAR 2026 8:41AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்க்கையின் மிகவும் சவாலான தடைகளை வெல்வதில் தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

துணிச்சலும் மன உறுதியும் நிறைந்த தனிநபருக்கு வாழ்க்கையில் சாத்தியமற்றது என்ற எதுவும் இல்லை என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தன்னம்பிக்கையின் வலிமையால் மிகவும் கடினமான சவால்களைக் கூட நம்மால் வெல்ல முடியும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதிபட கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், ஆயிரம் யானைகளை வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும் ஒரு சிங்கம் போல் ஒருவன் துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் உன்னதமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240999&reg=3&lang=2  

***

(Release ID 2240999)

SS/SV/KPG/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2260634) வருகையாளர் எண்ணிக்கை : 7