பிரதமர் அலுவலகம்
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
16 MAR 2026 12:05PM by PIB Chennai
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அவர் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நேரிட்ட தீ விபத்து மன வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்”.
----
(Release ID: 2240517)
SS/SV/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2260600)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam