நிதி அமைச்சகம்
பொதுத்துறை வங்கிகள், கடந்த நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 1.98 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAY 2026 2:32PM by PIB Chennai
பொதுத்துறை வங்கிகள் கடந்த 2025-26-ம் நிதியாண்டில் வலுவான நிதிசார் செயல்பாடுகளை பதிவு செய்துள்ளன. இது நீடித்த வர்த்தக வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், சொத்துக்களின் மேம்பட்ட தரநிலை, சாதனை அளவிலான லாபம் மற்றும் வலுவான மூலதனம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டும் வகையில் உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் செயல்திறன், வளர்ந்து வரும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப கடனுதவிகளை வழங்குவது உள்ளிட்டவை பொதுத்துறை வங்கிகளின் ஸ்திரத்தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு, கடந்த 2026 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ. 283.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12.8 சதவீத வளரச்சியைப் பதிவு செய்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மொத்த வைப்புத்தொகை முந்தைய ஆண்டைக்காட்டிலும் 10.6 சதவீதம் அதிகரித்து ரூ. 156.3 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், பொதுத்துறை வங்கிகளின் வலுவான செயல்திறனையும் பிரதிபலிப்பதாக உள்ளது. அதேபோன்று இந்த வங்கிகளின் கடன் வழங்கல் விகிதம் முந்தைய ஆண்டைக்காட்டிலும் 15.7 சதவீதம் உயர்ந்து ரூ. 127 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் கடன் தேவை இருப்பதை குறிப்பதாக உள்ளது. இதேபோன்று சில்லரை வர்த்தகம், விவசாயம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு வழங்கப்படும் கடனுதவியும் அதிகரித்துள்ளது.
மேம்பட்ட சொத்துக்களின் தரநிலை கடன் விரிவாக்க நடவடிக்கைகள், வருவாய் அதிகரிப்பு போன்றவை 2025-26-ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் லாபம் அதிகரிக்க முக்கிய பங்காற்றியுள்ளன. பொதுத்துறை வங்கிகளின் ஒட்டுமொத்த லாபத்தொகை ரூ. 3.21 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதேசமயம் ஒட்டுமொத்த நிகர லாபம் ஆண்டுதோறும் 11.1 சதவீத வளர்ச்சியுடன் ரூ. 1.98 லட்சம் கோடி என்ற அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளது. இது பொதுத்துறை வங்கிகளுக்கு தொடர்ந்து 4-வது ஆண்டாக ஒட்டுமொத்த லாபம் அதிகரித்து வருவதை குறிப்பதாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260203®=3&lang=1
***
SS/SV/RJ/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2260333)
வருகையாளர் எண்ணிக்கை : 8