தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய அஞ்சலின் ஏபிடி 2.0 குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி ஆய்வு செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAY 2026 2:07PM by PIB Chennai

இந்திய அஞ்சலின் அடுத்த தலைமுறை டிஜிட்டல் தளமான ஏபிடி 2.0 குறித்து மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி ஆய்வு செய்தார்.

நவீன சரக்குப் போக்குவரத்து மற்றும் சேவை மையமாக இந்திய அஞ்சல் சேவையை மாற்றுவதில்  உள்ள பங்களிப்புக் குறித்து இத்தளம் சுட்டிக்காட்டுகிறது. நிகழ்நேர புலனாய்வு, உள்ளூர் தேவையைப் பகுப்பாய்வு செய்தல், செயல்பாடுகளைக் கண்காணித்தல், களஅளவில் தரவு சார்ந்த முடிவுகளுடன் கிளை அலுவலகங்களுக்கு எவ்வாறு ஏபிடி 2.0 டிஜிட்டல் தளம் அதிகாரம் அளிக்கிறது என்பது குறித்து மத்திய இணையமைச்சர் எடுத்துரைத்தார்.

விரைவான விநியோகச் சேவை, நிர்வாகத் தலையீடுகளைக் குறைத்தல், முடிவெடுத்தலை மேம்படுத்துதல், வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்துவது மற்றும் மேலும் நம்பத்தகுந்த திறன்மிக்க நடவடிக்கைகள் உட்பட பல்வேறு செயல்முறைகளுக்கு இந்திய அஞ்சல் நிறுவனத்துக்கு இத்தளம் உதவுவதாக டாக்டர் பெம்மசானி குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260195&reg=3&lang=1

-----

SS/IR/KPG/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2260328) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Telugu_Vw