பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு ஆசியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையேயான விளக்கக் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAY 2026 6:52PM by PIB Chennai

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு தொடர்ச்சியான தகவல்கள் மூலம் குடிமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக, இன்று புதிதில்லி தேசிய ஊடக மையத்தில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இதில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள், வெளியுறவு அமைச்சகங்களின் அதிகாரிகள் பங்கேற்று, எரிபொருள் இருப்பு, கடல்சார் செயல்பாடுகள், அப்பகுதியில் உள்ள இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்கினர். ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம், உரக் கையிருப்பு நிலை மற்றும் அதன் கிடைக்கும் தன்மை குறித்தும் ஊடகங்களுக்கு விளக்கமளித்தது.

2026-ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்கான உரத் தேவை, 390.54 லட்சம் மெட்ரிக் டன்னாக வேளாண்மை மற்றும் குடும்ப நலத்துறையால் மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இன்றைய நிலவரப்படி கையிருப்பு சுமார் 199.65 லட்சம் மெட்ரிக் டன்னாக (51%க்கும் மேல்) உள்ளது. இது, வழக்கமான அளவான சுமார் 33%-ஐ விடக் கணிசமாக உயர்வாகும். இது, அரசின் மேம்பட்ட திட்டமிடல், முன்கூட்டிய கையிருப்பு மற்றும் திறமையான தளவாட மேலாண்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.

எரிவாயுவைப் பொறுத்தவரை, வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி, பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி (போக்குவரத்து) ஆகியவை 100% விநியோகம் செய்யப்படுவதை அரசு உறுதி செய்துள்ளது. வணிக எல்பிஜியைப் பொறுத்தவரை, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.  எல்பிஜி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்கின்றன. நாடு முழுவதும் நேற்று1500-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன.

பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் திடீர் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தித் தொடர்ந்து நடத்தி வருவதுடன், 382 எல்பிஜி விநியோக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளன. மேலும், நேற்று வரை 76 எல்பிஜி விநியோக நிறுவனங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. நேற்று, தொழில்துறை அடிப்படையில் இணையவழியிலான எல்பிஜி சிலிண்டர் முன்பதிவுகள் 98% அதிகரித்துள்ளன. கடந்த 3 நாட்களில், சுமார் 1.14 கோடி சிலிண்டர்களுக்கான முன்பதிவுகளுக்கு எதிராக, 1.26 கோடிக்கும் அதிகமான எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ எஃப்டிஎல் விநியோகமும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.  கடந்த 3 நாட்களில் 1.4 லட்சத்திற்கும் அதிகமான 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த 3 நாட்களில், மொத்தம் 17,044 மெட்ரிக் டன் (8.97 லட்சத்திற்கும் அதிகமான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர்களுக்குச் சமம்) வர்த்தக எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களில், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் மொத்தம் 762 மெட்ரிக் டன் வாகன எல்பிஜி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 2026 முதல், சுமார் 6.79 லட்சம் பிஎன்ஜி இணைப்புகளுக்கு எரிவாயு வழங்கப்பட்டுள்ளதுடன், கூடுதலாக 2.68 லட்சம் இணைப்புகளுக்கான உள்கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 9.47 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், சுமார் 7.29 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிய இணைப்புகளுக்காகப் பதிவு செய்துள்ளனர். 10.05.2026 வரை, 52,300-க்கும் மேற்பட்ட பிஎன்ஜி நுகர்வோர் MYPNGD.in என்ற இணையதளம் வழியாகத் தங்களது எல்பிஜி இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259962&reg=3&lang=1

(Release ID: 2259962)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2260054) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Kannada , Malayalam