பிரதமர் அலுவலகம்
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலின் முக்கிய நிகழ்வுகளைப் பிரதமர் பகிர்ந்துகொண்டார்
என்றும் அழியாத இந்தக் கோயில், நாகரிகத் துணிச்சலையும் தளராத பக்தியையும் பறைசாற்றுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAY 2026 5:04PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சோம்நாத் அமிர்தப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.
புனித சோம்நாத் கோயிலின் உயர்ந்த கோபுரத்தில் பெருமையுடன் பறக்கும் புனிதக் கொடியைக் குறிப்பிட்ட பிரதமர், அது இந்தியாவின் நம்பிக்கையின் வெற்றிச் சின்னம் என்றும், கோடிக்கணக்கான இந்தியர்களின் கூட்டு உணர்வின் தெய்வீகப் பிரகடனம் என்றும் கூறினார். சோம்நாத்தின் சிகரத்தில் உள்ள காவிக்கொடி, தளராத பக்தியின் ஒரு உயிருள்ள வெற்றிக் காவியம் என்றும், அது என்றென்றும் இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டே இருக்கும் என்றும், ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும் என்றும் திரு மோடி வலியுறுத்தினார்.
கோயிலின் வரலாற்றை நினைவு கூர்ந்த பிரதமர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இந்த மண்ணின் நெறிமுறைகளைத் தகர்த்துவிடலாம் என்று நம்பியவர்களால் சோம்நாத் மீதான முதல் தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டார். பாரத மாதாவின் மிகுந்த துணிச்சல் மிக்க பிள்ளைகளால்தான் சோம்நாத் மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது என்பதை அவர் எடுத்துரைத்தார். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில், புதிதாகக் கட்டப்பட்ட சோம்நாத் கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் வரலாற்றின் தூசியில் மறைந்துவிட்டாலும், பாரதத்தின் ஆன்மா நிலைத்திருக்கிறது என்று உலகிற்கு உரைத்தது என திரு மோடி குறிப்பிட்டார். நாகரிகத் துணிச்சலையும் தளராத பக்தியையும் பறைசாற்றும் வகையில் சோம்நாத், கம்பீரமாகவும், நிலையாகவும் நிற்கிறது என்று கூறிய அவர், மகாதேவனின் ஆசிகள் அனைவர் மீதும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகளில் பிரதமர் தெரிவித்ததாவது:
“சோம்நாத்தின் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில், முதலாவது தாக்குதல் சம்பவம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அத்தகைய தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட்டவர்கள், நமது மண்ணின் நெறிகளைத் தகர்த்துவிடலாம் என்று நம்பினார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது தவறு. பாரத மாதாவின் துணிச்சல் மிக்க குழந்தைகளால், சோம்நாத் மீண்டும் மீண்டும் புனரமைக்கப்பட்டு வந்தது.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில், புதிதாகப் புனரமைக்கப்பட்ட சோம்நாத் கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் வரலாற்றின் தூசியில் மறைந்துவிட்ட போதிலும், பாரதத்தின் ஆன்மா நிலைத்திருக்கிறது என்று உலகிற்குப் பறைசாற்றின.
சோம்நாத், கம்பீரமாகவும் நிலையானதாகவும் உயர்ந்து நிற்கிறது. அது நமது நாகரிகத் துணிவையும் தளராத பக்தியையும் பறைசாற்றுகிறது. மகாதேவனின் ஆசிகள் என்றென்றும் நம் அனைவர் மீதும் நிலைத்திருக்கட்டும்.”
“சோம்நாத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளின் மேலும் சில முக்கிய காட்சிகள்…”
(Release ID: 2259861)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2260027)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam