பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சோமநாதர் ஆலயப் புனரமைப்பை தேசியத் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக எடுத்துரைக்கும் ஒரு கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 11 MAY 2026 11:47AM by PIB Chennai

புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியாவில்சோமநாதர் ஆலயப் புனரமைப்பு என்பது தேசியத் தன்னம்பிக்கையின் தொடக்ககால வெளிப்பாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது என்பதை எடுத்துரைக்கும் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலின் கட்டுரை ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

நாடு சோமநாதரின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில்எதிர்ப்புகளை எதிர்கொண்ட போதும் புனரமைக்கப்பட்ட கோயில் திறக்கப்பட்டதை இந்தக் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த மைல்கல் இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சிக்கும் பெருமைக்கும் வித்திட்டது என்றும் திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"நாடு சோமநாதரின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில்புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியாவில்சோமநாதர் ஆலயப் புனரமைப்பு என்பது தேசியத் தன்னம்பிக்கையின் தொடக்ககால வெளிப்பாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்பதை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலின் கட்டுரை எடுத்துரைக்கிறது.

அன்றைய அரசியல் குழுக்களின் எதிர்ப்புகளையும் மீறிபுனரமைக்கப்பட்ட கோயில் திறக்கப்பட்டுஇந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சிக்கும் பெருமிதத்திற்கும் வித்திட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்."

(Release ID: 2259692)

***

SS/SMB/SH


(रिलीज़ आईडी: 2259938) आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam