பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திருவனந்தபுரம் ராணுவ தளத்தை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பார்வையிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2026 8:05AM by PIB Chennai

பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், 2026 மே 8 அன்று இந்திய ராணுவத்தின் தெற்கு கமாண்டிங் பிரிவின் கீழ் செயல்படும் திருவனந்தபுரம் ராணுவ தளத்தைப் பார்வையிட்டு, அங்குள்ள செயல்திறன் தயார்நிலை மற்றும் நடைபெற்று வரும் மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்தார்.

இந்தப் பயணத்தின் போது, பாதுகாப்புத்துறை இணையமைச்சர், அங்குள்ள படைவீரர்களுடன் கலந்துரையாடி, தளத்தில்  மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்திறன் தயார்நிலை மற்றும் நலவாழ்வு நடவடிக்கைகள் குறித்து நேரடியாக அறிந்துகொண்டார். போர்த்திறனை மேம்படுத்தவும், நிறுவனத் திறன்களை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முக்கிய செயல்பாட்டு, நிர்வாக மற்றும் கட்டமைப்பு சார்ந்த முயற்சிகள் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

ராணுவ தளத்தில் பணியாற்றும் அனைத்து நிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் காட்டிய தொழில்முறை திறன், அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத பணிப்பற்று ஆகியவற்றை திரு சஞ்சய் சேத்  பாராட்டினார். அதேசமயம், ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்திக்கொண்டு, உயர்ந்த செயல்திறன் தயார்நிலையை நிலைநிறுத்தியதற்காக அவர் பாராட்டு தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தை எதிர்காலத் தேவைகளுக்கு தயாரானதும் தொழில்நுட்ப முன்னேற்றம் கொண்டதுமான படையாக உருவாக்கும் தேசியக் கனவிற்கு இணங்க, நவீனமயமாக்கல் , கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆயுதப்படை வீரர்களுக்கான நீடித்த நலத்திட்டங்கள் மூலம் பாதுகாப்புத் திறன்களை மேலும் வலுப்படுத்துவதில் அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாக அமைச்சர் மீண்டும் உறுதியளித்தார்.

 

(Release ID: 2259249)

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259317) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam