பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராணா பிரதாப்பின் பிறந்தநாளன்று பிரதமர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2026 9:06AM by PIB Chennai

மாபெரும் வீரர் மகாராணா பிரதாப்பின் பிறந்தநாளன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

மகாராணா பிரதாப் வீரம் மற்றும் தீரத்தின் அழியாத சின்னமாகத் திகழ்கிறார் என்று பிரதமர் கூறியுள்ளார். அந்த மாபெரும் வீரர் தாய்நாட்டின் கௌரவம், பெருமை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

 மகாராணா பிரதாப்பின் அசைக்க முடியாத தைரியம் மற்றும் தளராத சுயமரியாதையின் காவியம், வரும் தலைமுறைகளுக்கும் நாட்டு மக்களின் இதயங்களில் தேசபக்தி உணர்வைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

பிரதமர் தனது   சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில்  பின்வருமாறு கூறியுள்ளார்:

वीरता और पराक्रम के अमर प्रतीक, देश के महान योद्धा महाराणा प्रताप को उनकी जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। उन्होंने मातृभूमि की आन-बान और शान की रक्षा के लिए अपना जीवन समर्पित कर दिया। उनके अदम्य साहस और अटूट स्वाभिमान की गाथाएं युगों-युगों तक देशवासियों के हृदय में राष्ट्रभक्ति का दीप प्रज्वलित करती रहेंगी।”

Release ID: 2259250

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259307) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam