விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

இந்தியா-பிரான்ஸ் கண்டுபிடிப்புகளுக்கான ஆண்டாக 2026 திகழும்- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAY 2026 4:06PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று பிரான்ஸ் நாட்டின் ஆராய்ச்சி மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் பேராசிரியர் பிலிப் பாப்டிஸ்ட் உடன் காணொலிக் காட்சி வாயிலாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதுஅறிவியல்தொழில்நுட்பம்விண்வெளி ஆகிய துறைகளில் விரிவடைந்து வரும் இந்தியா-பிரான்ஸ் ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அறிவியல் மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் தூணாக உருவெடுத்துள்ளதோடுதொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும், இரு நாட்டு மக்களுக்கிடையிலான நெருக்கமான பிணைப்பிற்கும் வழிவகுப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். 2026-ஆம் ஆண்டை 'இந்தியா-பிரான்ஸ் கண்டுபிடிப்புகளுக்கான ஆண்டாகஅறிவித்திருப்பதுவளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார்.

விண்வெளி ஒத்துழைப்பு குறித்துப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங்மேகா-டிராபிக்ஸ்சரள்  போன்ற கூட்டு செயற்கைக்கோள் திட்டங்களையும், தற்போது செயல்பாட்டில் உள்ள திரிஷ்ணா திட்டப் பணிகளையும் சுட்டிக்காட்டினார். மேலும்பிரான்சில் நேவிக் தரைதள நிலையத்தை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பு குறித்தும்இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு பிரான்ஸ் வழங்கி வரும் ஆதரவு குறித்தும் அவர் பேசினார். பிரான்ஸ் நாட்டின் ஆராய்ச்சி மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் பேராசிரியர் பிலிப் பாப்டிஸ்ட்விண்வெளி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பில் இந்தியாவை ஒரு முக்கியமான, நம்பகமான கூட்டாளி என்று கூறினார். புவி கண்காணிப்புஏவுதள அமைப்புகள், விண்வெளி ஆய்வுகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

பேராசிரியர் பிலிப் பாப்டிஸ்ட், "கடல்சார் கூட்டமைப்புக்கான விண்வெளி" மூலம் கடல் தொடர்பான தரவுகளைப் பகிர்வதில் மேம்பட்ட ஒத்துழைப்பை முன்மொழிந்தார். சர்வதேச ஒத்துழைப்பு குறித்துப் பேசிய அவர், இந்த ஆண்டு செப்டம்பரில் பாரிஸில் நடைபெறவுள்ள சர்வதேச விண்வெளி உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தார். இத்தகைய முயற்சிகளை வரவேற்பதாகக் கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், கடல் ஆராய்ச்சிமனித விண்வெளிப் பயணத்தில் கூடுதல் ஒத்துழைப்பிற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார். இந்தியாவின் ஆழ்கடல் ஆராய்ச்சி இயக்கம், நீண்ட கடற்கரைப் பகுதியைக் கொண்டிருப்பது ஆகிய அம்சங்கள் மூலம் கடல் தொடர்பான கூட்டு முயற்சிகளுக்கு வலு சேர்ப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258715&reg=3&lang=1

 

***

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2258833) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Telugu