தேர்தல் ஆணையம்
பொதுத் தேர்தல், இடைத்தேர்தல்கள் 2026: தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் ரூ.865 கோடி அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
17 APR 2026 4:37PM by PIB Chennai
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் சில தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்கான கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் 2026 மார்ச் 15 அன்று வெளியிட்டது. தேரத்ல் நடத்தை விதிகள் கண்டிப்புடன் அமல் செய்யப்படுவதை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வன்முறையற்ற, அச்சுறுத்தல் இல்லாத, பரிசுப் பொருட்கள் இல்லாத தேர்தலை உறுதி செய்ய தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் மற்றும் இவற்றின் எல்லைகளில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், காவல் துறை தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், அமலாக்க முகமைகளின் தலைவர்கள் ஆகியோருடன் பலமுறை ஆய்வுக் கூட்டங்களை தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் பெறப்படும் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்க 5,011 (மேற்கு வங்கத்தில் 2728, தமிழ்நாட்டில் 2,283) பறக்கும் படைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இவை தவிர பல்வேறு இடங்களில் திடீர் சோதனைகள் நடத்த 5,363 (மேற்கு வங்கத்தில் 3,142 தமிழ்நாட்டில் 2,221) நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் கால பறிமுதல் நிர்வாக முறை செயல்பாட்டுக்கு வந்தபின் 2026 ஏப்ரல் 17 வரையிலான நிலைமை விவரம்:
மேற்கு வங்கத்தில் ரூ.21 கோடி ரொக்கம், ரூ.81 கோடி மதிப்பிலான 31,94,621 லிட்டர் மதுபானங்கள், ரூ.100 கோடி மதிப்பில் போதைப் பொருட்கள், ரூ.54 கோடி மதிப்பில் விலை மதிப்புள்ள உலோகங்கள், ரூ.172 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ரூ.78 கோடி ரொக்கம், ரூ.3 கோடி மதிப்பிலான 97,107 லிட்டர் மதுபானங்கள், ரூ.74 கோடி மதிப்பில் போதைப் பொருட்கள், ரூ.105 கோடி மதிப்பில் விலை மதிப்புள்ள உலோகங்கள், ரூ.178 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரு மாநிலங்களிலும் மொத்தம் பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மதிப்பு ரூ.865 கோடியாகும்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் பற்றி பொதுமக்களும்,அரசியல் கட்சிகளும், சி–விஜில் தளத்தில் புகார் செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2252990®=3&lang=1
***
SS/SMB/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2253104)
வருகையாளர் எண்ணிக்கை : 17