பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த தேசிய மாநாடு - மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
14 FEB 2026 5:04PM by PIB Chennai
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இன்று (பிப்ரவரி 14, 2026) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது.
இந்த மாநாட்டில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சகங்கள்/துறைகள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள், உள் குழுக்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில்துறை தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு அனில் மாலிக் பேசுகையில், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்புக்காண ஷி - பாக்ஸ் (SHe-Box ) தளம் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் எடுத்துரைத்தார்.
தமது சிறப்புரையில், மத்திய அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி, பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது வெறும் சட்டப்பூர்வ தேவை மட்டுமல்ல, எனவும் நீதி மற்றும் சமத்துவத்திற்கான நாட்டின் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும் என்றும் கூறினார். பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவை வளர்ச்சியடைந்த பாரத தொலைநோக்குப் பார்வைக்கு மையமாக உள்ளன என்று அவர் கூறினார்.
மத்திய இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் தமது சிறப்பு உரையில், பணியிடப் பாதுகாப்பு என்பது ஒரு அடிப்படை உரிமை என்பதை சுட்டிக் காட்டினார். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு துறையிலும் பாதுகாப்பாகவும், அதிகாரம் பெற்றவராகவும் உணருவதை உறுதி செய்வதே இலக்கு என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228130®=3&lang=1
*
TV/PLM/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2243083)
வருகையாளர் எண்ணிக்கை : 29