பிரதமர் அலுவலகம்
பெங்களூரு - கன்னியாகுமரி இடையே சைக்கிள் பயணம் மேற்கொண்ட திரு எஸ் சுரேஷ் குமாருக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
01 JAN 2026 10:01PM by PIB Chennai
பெங்களூருவிலிருந்து கன்னியாகுமரி வரை வெற்றிகரமாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதனைப் படைத்த திரு எஸ் சுரேஷ் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்தார்.
இந்த சாதனை பாராட்டத்தக்கது மட்டுமின்றி உத்வேகம் அளிக்கக் கூடியது என்று கூறியுள்ளார். இது சுரேஷ் குமாரின் முயற்சி மற்றும் இடைவிடாத உத்வேகத்திற்கான உதாரணமாகும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக பெரும் உடல்நலக் குறைவுக்குப் பிறகு அவர் சாதனைப்படைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த முயற்சிகள் சமூகத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு உடல் உறுதி குறித்த முக்கிய செய்தியையும் உறுதிப்பாட்டையும் விளக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். திரு சுரேஷ் குமாரிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பிரதமர், அவரது முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து தமது பயணத்தில் அவருடைய துணிச்சலுக்கும் விடாமுயற்சிக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி எழுதியிருப்பதாவது:
“திரு எஸ் சுரேஷ் குமார் மேற்கொண்ட பெங்களூரு முதல் கன்னியாகுமரி வரையிலான சைக்கிள் பயணம் பாராட்டத்தக்கது மற்றும் உத்வேகம் அளிக்கக் கூடியது. பெரும் உடல் நலக்குறைவுக்குப் பிறகு அவர் மேற்கொண்ட இந்த சாதனை அவருடைய முயற்சியையும் உறுதிப்பாட்டையும் எடுத்துரைக்கிறது. உடல் உறுதி குறித்த முக்கிய செய்தியையும் இது அளிக்கிறது. அவருடன் உரையாடி அவருடைய முயற்சிக்காக பாராட்டுத் தெரிவித்தேன்.
****
(Release ID: 2210653)
TV/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2242559)
வருகையாளர் எண்ணிக்கை : 31
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam