பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் மாநிலம் உருவானதன் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 NOV 2025 3:46PM by PIB Chennai

டேராடூனில் நடைபெற்ற உத்தராகண்ட் மாநிலம் உருவானதன் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ₹8140 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது, இந்த நாள் நம் அனைவருக்கும் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது என்று பிரதமர் கூறினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"உத்தராகண்ட் உருவானதன் வெள்ளி விழா கொண்டாட்டங்களில், மக்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு நிரப்பியுள்ளது."

"வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் உத்தராகண்ட் ஒரு வலுவான பங்கை வகிக்கிறது. மாநிலத்தின் வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அற்புதமான கண்காட்சியில் அதன் வளர்ச்சிப் பயணத்தைக் கண்டு மகிழுங்கள்."

"உத்தரகாண்டின் பாரம்பரியம், கலாச்சாரம், அதன் முன்னேற்றம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் ஒரு கையேட்டை வெளியிட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது."

"உத்தரகாண்ட் மாநிலம் உருவானதன் வெள்ளி விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது."

"உத்தராகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், அதன் முன்னேற்றத்தில் எனது நம்பிக்கை வலுவடைந்துள்ளது."

----

(Release ID: 2188022)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2240921) வருகையாளர் எண்ணிக்கை : 18