தேர்தல் ஆணையம்
அசாம் சட்டப்பேரவை தேர்தலுக்கு சிறப்பு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 MAR 2026 5:07PM by PIB Chennai
அசாம் சட்டப்பேரவை பொதுத்தேர்தலையொட்டி, சிறப்பு பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு மஞ்ஜித் சிங் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி இந்த சிறப்பு பார்வையாளர் அசாம் மாநிலத்திற்கு அவ்வப்போது சென்று தேர்தலை நடத்துவதற்கான முன் ஏற்பாட்டு பணிகளைப் பார்வையிட்டு, தேவையான ஆலோசனைகளையும் வழங்குவார்.
அசாம் மாநிலத்தில் 2026 ஏப்ரல் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 2026 மே 4 அன்று நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240780®=3&lang=2
***
TV/IR/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2240902)
வருகையாளர் எண்ணிக்கை : 12