நிலக்கரி அமைச்சகம்
மகாராஷ்டிராவில் இரண்டு நிலக்கரி வாயுவாக்க திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் அடிக்கல் நாட்டினார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAR 2026 7:26PM by PIB Chennai
மகாராஷ்டிராவிற்கான தமது இரண்டு நாள் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (14.03.2026), மத்திய நிலக்கரி - சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸுடன் சேர்ந்து, மகாராஷ்டிராவின் சந்திரபூரில் இரண்டு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முர்பார் சுரங்க தளத்தில் சுரங்கப் பணிகளை நிறுத்தும் நடவடிக்கைகளை திரு ஜி. கிஷன் ரெட்டி ஆய்வு செய்தார். சிமூரில் ஆலோசனைக் குழு கூட்டத்திலும் திரு கிஷன் ரெட்டி பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, இந்தியாவின் எரிசக்தி தற்சார்பு, தொழில்துறை மேம்பாடு ஆகியவற்றின் முக்கிய தூணாக நிலக்கரி வாயுவாக்கம் உள்ளதாகக் கூறினார். அனுமதிக்கப்பட்ட 7 நிலக்கரி வாயுவாக்கத் திட்டங்களில் 4 மகாராஷ்டிராவில் உள்ளதாக அவர் தெரிவித்தார். நிலக்கரி வாயுவாக்கம் இறக்குமதியைக் குறைப்பதற்கும், அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்கும், தொழில்துறை விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதற்கும் உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த இரண்டு திட்டங்களிலும் 10,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்படும் என்று அவர் கூறினார். இந்தத் திட்டங்கள் 2,000 க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளையும், 10,000 மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் உற்பத்தியைத் தொடங்கி, தூய நிலக்கரி தொழில்நுட்பங்களில் ஒரு புதிய அளவுகோலை அமைக்கும் என்று அமைச்சர் திரு கிஷன் ரெட்டி நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240230®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2240270)
வருகையாளர் எண்ணிக்கை : 6