PIB Backgrounder
azadi ka amrit mahotsav

அனைவருக்கும் தண்ணீர், தண்ணீருக்காக அனைத்தும்: மக்கள், பஞ்சாயத்துகள் மற்றும் ஜல்ஜீவன் இயக்கம்

प्रविष्टि तिथि: 13 MAR 2026 12:06PM by PIB Chennai

பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய குழாய்கள், பம்புகள், சேகரிப்பு கட்டுமானங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. எஃகு கான்கிரீட் ஆகியவற்றால் ஏற்படுத்தப்படும் இந்த வலைப்பின்னலுக்கு அப்பால் அன்றாடம் தண்ணீருக்காக ஓடுகின்ற மக்கள், நீடிக்கத்தக்க தண்ணீர் சேமிப்பு முறைகளை உருவாக்கியுள்ளன. கிராமப்புற வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீர் விநியோகத்திற்கு ஆதரவாக உள்ளூர் குடிநீர் விநியோக முறைகளை செயல்படுத்தவும், கண்காணிக்கவும், பராமரிக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், முன்களப் பணியாளர்கள், சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள், பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், தொழில்நுட்ப திறன் பெற்றவர்கள் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்தனர்.

ஆகஸ்ட் 2019-ல் தொடங்கப்பட்ட ஜல்ஜீவன் இயக்கத்தில் 2026 மார்ச் 3 நிலவரப்படி நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் 15.82 கோடிக்கும் அதிகமான வீடுகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பதை உறுதி செய்ய இந்தியாவில் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

2026-27 மத்திய பட்ஜெட்டில் இந்த இயக்கத்திற்கு ரூ.67,670 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இயக்கம் 2028 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரக குடிநீர் உள்கட்டமைப்பு விரிவாக்கம் நாடு முழுவதும் நடைபெறுவதற்கு அடித்தள நிலையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தனி நபர்களின் முயற்சியும் இதற்கு உதவியுள்ளது.

இத்தகைய பங்களிப்புகளை கொண்டாடவும், ஊக்கப்படுத்தவும் ஜல் மகோத்சவ் 2026-ன் போது கிராமப்புற குடிநீர் நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் சிறப்பாக பங்களித்த தனிநபர்களுக்கு குடியரசுத்தலைவர் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் ஜல்ஜீவன் இயக்கத்திற்கு மக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்த 2026 மார்ச் 8 முதல் 22 வரை தேசிய அளவிலான பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239427&reg=3&lang=1

***

AD/SMB/RJ/SH


(रिलीज़ आईडी: 2239767) आगंतुक पटल : 79
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Malayalam