பிரதமர் அலுவலகம்
பிரதமர் அசாம் மாநிலத்தில் மார்ச் 13-14 தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்
ரூ 47,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAR 2026 5:33PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, மார்ச் 13-14 ஆகியத் தேதிகளில், அசாம் மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, கோக்ரஜார், குவஹாத்தி மற்றும் சில்சார் பகுதிகளில் ரூ 47,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றது திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.
மார்ச் 13 - ம் தேதி, பிற்பகல் 1:30 மணியளவில், பிரதமர் கோக்ரஜரில் ரூ 4,570 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், மாலை 5 மணியளவில், குவஹாத்தியில், நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் ரூ 19,680 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
மார்ச் 14 - ம் தேதி, காலை 10:45 மணியளவில், பிரதமர் சில்சாரில் ரூ 23,550 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
அசாம் மாநிலம் கோக்ரஜாரில், ரூ 3,200 கோடிக்கும் அதிக மதிப்பிலான முக்கிய சாலை உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு இடையேயான சாளை போக்குவரத்துக்கான இணைப்பை மேம்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகளுக்கு இடையிலான இணைப்புகளை வலுப்படுத்தவும் அம்மாநிலம் முழுவதும் 900 கிமீ நிலத்திற்கான சாலைகள் அமைக்கப்படும்.
போடோலாந்து பிராந்திய கவுன்சில் பகுதியில் ரூ 1,100 கோடி முதலீட்டில் நான்கு மேம்பாலம் மற்றும் இரண்டு பாலங்கள் உட்பட ஆறு சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் பூமி பூஜை செய்கிறார். இந்தத் திட்டங்கள் கோக்ரஜார் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுலா, விவசாயம், சுகாதாரம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவிடும்.
அசாம் - வடகிழக்கு பிராந்திம் இடையே ரயில் போக்குவரத்துக்கான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மூன்று புதிய ரயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். வடகிழக்கு - தென்னிந்தியா இடையே நேரடி ரயில் போக்குவரத்துக்கான இணைப்பை வழங்கும் காமாக்யா-சார்லபள்ளி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்; அசாம் - மேற்கு வங்கம் இடையே குவஹாத்தி-நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் சேவை, மற்றும் அசாம் - திரிபுரா இடையே பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுமுகமான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் நாரங்கி-அகர்தலா எக்ஸ்பிரஸ் ஆகியவை இதில் அடங்கும்.
குவஹாத்தியில், தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலப் பட்டாக்களை பிரதமர் வழங்குகிறார். இது தேயிலைத் தோட்ட சமூகத்திற்கு வீட்டு நில உரிமைகளை வழங்குவதில் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நடவடிக்கையாகும். பாதுகாப்பான நில உரிமை வீட்டுவசதி பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், நிறுவன கடன் மற்றும் நலத்திட்டங்கள் எளிதாகக் கிடைக்க உதவிடும். மேலும் இது நீண்டகால சமூக, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள 9.3 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி ஆதரவுத் திட்டத்தின் 22வது தவணைத் தொகையையும் பிரதமர் விடுவிக்கிறார். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ரூ 2,000 நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
வடகிழக்கு இந்தியாவில், முதன்முறையாக நான்கு வழி அதிவேக பசுமை வழித்தடமான ஷில்லாங்-சில்சார் சாலை அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ 22,860 கோடி முதலீட்டில் 166 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம், மேகாலயா - அசாம் மாநிலங்களுக்கி இடையே சாளை போக்குவரத்திற்கான இணைப்பை கணிசமான அளவில் மேம்படுத்தும். இந்த திட்டம் குவஹாத்தி - சில்சார் இடையேயான தூரத்தைக் குறைப்பதுடன், பயண நேரம் 8.5 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரமாகக் குறைக்கும். இது இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியையும், வர்த்தகத்தையும் அதிகரிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239052®=3&lang=1
(Release ID: 2239052)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2239134)
வருகையாளர் எண்ணிக்கை : 20