சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
ரயில் பாதைகளில் யானைகள் விபத்துக்களில் சிக்குவதைத் தடுப்பது குறித்த 2 நாள் பயிலரங்கு - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAR 2026 9:31AM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் இணைந்து, "ரயில் பாதைகளில் யானைகள் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பதைக் குறைப்பதற்கான கொள்கைகளின் செயலாக்கம்" என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய பயிலரங்கு, டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தில், 2026 மார்ச் 10-11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த பயிலரங்கில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானைப் பாதுகாப்பிற்கான செயல்திட்டப் பிரிவு, ரயில்வே அமைச்சகம், யானைகள் வசிக்கும் மாநிலங்களின் வனத்துறைகள் மற்றும் முன்னணி பாதுகாப்பு விஞ்ஞானிகள் உட்பட 40 பிரதிநிதிகள் பங்கேற்றனர். முக்கிய ரயில் மண்டலங்களில், கிழக்கு மத்திய ரயில்வே, கிழக்கு கடற்கரை ரயில்வே, வடகிழக்கு ரயில்வே, வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே, வடக்கு ரயில்வே, தென்கிழக்கு ரயில்வே, தெற்கு ரயில்வே மற்றும் தென்மேற்கு ரயில்வே ஆகியவை இதில் அடங்கும்.
உலகளவில் உள்ள ஆசிய யானைகளின் எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான யானைகள் இந்தியாவில் உள்ளன. அவற்றின் முக்கிய வாழ்விடங்கள் கிழக்கு, வடகிழக்கு, தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளை உள்ளடக்கியது. இருப்பினும், யானைகளின் வாழ்விடங்களில், குறிப்பாக, அசாம், மேற்கு வங்கம், உத்தரகண்ட், ஒடிசா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில், அதிகரித்து வரும் மாறுதல் மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளின் விரிவாக்கப் பணிகள் ஆகியவை, ரயில் பாதைகளில் யானைகள் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பதற்கான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும், அறிவியல் அடிப்படையிலான தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும் இந்தப் பயிலரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238703®=3&lang=1
***
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2238836)
வருகையாளர் எண்ணிக்கை : 7