PIB Headquarters
azadi ka amrit mahotsav

வேளாண் கடன் அட்டை, விவசாய வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAR 2026 11:47AM by PIB Chennai

விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள், வரலாற்று ரீதியாக நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. தேசிய வருவாய், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குகிறது.

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 46.1 சதவீதம் பேர், தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது நிதிப் பாதுகாப்பையும், விவசாயிகளுக்கு கடனுதவி கிடைப்பதையும் உறுதி செய்வது மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தச் சூழலில், வேளாண் நிதியை வலுப்படுத்த இலக்குடன் கூடிய தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக வேளாண் கடன் அட்டை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்துகிறது. திருத்தியமைக்கப்பட்ட வேளாண் கடன் அட்டைத் திட்டம், குறுகிய கால பயிர் சாகுபடி, அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகள், சந்தைப்படுத்தல் தொடர்பான செலவுகள், வீட்டு நுகர்வுத் தேவைகள், பண்ணை பராமரிப்புக்கான பணி மூலதனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் பண்ணை சாராத நடவடிக்கைகளுக்கான முதலீட்டு கடன் உள்ளிட்ட பல்வேறு வேளாண் தேவைகளுக்கு விவசாயிகளுக்கு போதுமான மற்றும் சரியான நேரத்தில் கடன் கிடைப்பதை உறுதி செய்ய வகை செய்கிறது.

வேளாண் கடன் அட்டை, சிறு, குறு, குத்தகை விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட விவசாயிகளுக்கு சரியான நேரத்தில், மலிவு விலையில், பிணையமில்லாத கடனுதவியை வழங்குகிறது.

மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ், கடன் உச்சவரம்பு ரூ 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிணையில்லாத கடனுதவித் தொகை தலா ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 7.72 கோடிக்கும் அதிகமான வேளாண் கடன் அட்டைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. ரூ 10.2 லட்சம் கோடி கடன்கள் நிலுவையில் உள்ளன.

வேளாண் கடன் அட்டைக்கான இணையதளம் 457 வங்கிகளில் இணைந்துள்ளதுடன், வர்த்தக, பிராந்திய, கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளில் 1,998.7 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238004&reg=3&lang=1

***

(Release ID: 2238004)

TV/SV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2238140) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Bengali , Gujarati