விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-26-ம் ஆண்டிற்கான முக்கிய விவசாயப் பயிர்களின் உற்பத்தி தொடர்பான இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAR 2026 4:19PM by PIB Chennai

2025-26-ம் ஆண்டில் கரீப், ரபி என இரண்டு பருவங்களிலும் முக்கிய வேளாண் பயிர்களின் உற்பத்திக்கான இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. முக்கிய வேளாண் பயிர்கள் குறித்த தரவுகளை அங்கீகரித்து வெளியிட்ட மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், விவசாயிகளின் செழிப்புக்காக இத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார். இதன் விளைவாக, நமது விவசாயத் துறை நிலையான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

 

மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களுடன் சரிபார்க்கப்பட்டு மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முறை உணவு தானிய உற்பத்திச் சூழல் மிகவும் வலுவாகவும் சாதனை அளவிலும் காணப்படுகிறது. 2025–26-ம் ஆண்டிற்கான இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, கரீஃப் உணவு தானிய உற்பத்தி 1741.44 லட்சம் மெட்ரிக் டன் ஆகவும், ரபி உணவு தானிய உற்பத்தி 1745.13 லட்சம் மெட்ரிக் டன் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு கரீஃப் உணவு தானிய உற்பத்தியான 1694.60 லட்சம் மெட்ரிக் டன், ரபி உணவு தானிய உற்பத்தியான 1691.66 லட்சம் மெட்ரிக் டன் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது முறையே 46 லட்சம் மெட்ரிக் டன்னும் (2.8%), 53 லட்சம் மெட்ரிக் டன்னும் (3.2%) அதிகமாகும்.

 

2024-25-ம் ஆண்டில் 1227.72 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த கரீஃப் அரிசி உற்பத்தி 2025–26-ம் ஆண்டில் 1239.28 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. ரபி பருவ அரிசி உற்பத்தி 167.20 லட்சம் மெட்ரிக் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. கோதுமை உற்பத்தி 1202.10 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. இது முந்தைய ஆண்டு உற்பத்தியான 1179.45 லட்சம் மெட்ரிக் டன்னுடன் ஒப்பிடும்போது 22.65 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும்.

 

கரீஃப் பருவ சிறு தானிய உற்பத்தி 123.43 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், ரபி பருவ சிறுதானிய உற்பத்தி 30.98 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் உள்ளது.

 

துவரம் பருப்பு உற்பத்தி 34.55 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. பயறு வகைகளின் உற்பத்தி 17.33 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது.

 

கரீஃப் பருவத்தில் நிலக்கடலை உற்பத்தி முறையே 112.94 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் ரபி பருவத்தில் 7.97 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் இருந்தது. கரீஃப் பருவத்தில் நிலக்கடலை உற்பத்தி முந்தைய ஆண்டை விட 8.82 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும்.

 

மேலும் விரிவான தகவலுக்கு, upag.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237560&reg=3&lang=1

 

(Release ID : 2237560)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2237862) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , Odia , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati