உள்துறை அமைச்சகம்
போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான தீவிர இயக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
10 MAR 2026 3:31PM by PIB Chennai
தேசிய தலைநகரை போதைப்பொருள் இல்லாததாக மாற்றுவதற்காக, போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக கவனம் செலுத்தும் நடவடிக்கையாக தில்லி காவல்துறை "ஆபரேஷன் கவாச்" என்பதைத் தொடங்கியுள்ளது. 13.05.2023 முதல் 23.01.2026 வரை, தில்லியின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 12 சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 9,694 இடங்கள் சோதனை செய்யப்பட்டன. போதைப்பொருள் தடுப்புச் சட்டம், 1985-ன் கீழ் 851 வழக்குகளும், டெல்லி கலால் சட்டம், 2009-ன் கீழ் 1,690 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன; மொத்தம் 2,640 பேர் கைது செய்யப்பட்டனர்.
2023 முதல் 2026 வரை (15.02.2026 வரை), போதைப்பொருள் தொடர்பான மொத்தம் 5,467 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7,134 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 17,435 கிலோகிராம் போதைப்பொருட்கள் தில்லி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237484®=3&lang=1
(Release ID : 2237484)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2237839)
வருகையாளர் எண்ணிக்கை : 11