மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 10 MAR 2026 4:14PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (10.03.2026) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

கோயில் நகரமான மதுரையில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம், மாநிலத்தின் பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். இது தென் தமிழ்நாட்டிற்கான ஒரு முக்கிய விமானப் போக்குவரத்து நுழைவாயிலாக அமைந்துள்ளதுடன் சுற்றுலாவையும், புனித யாத்திரையையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து, இப்பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.

 

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையம் என்ற தரத்திற்கு உயர்த்துவது பிராந்திய விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும். அத்துடன் வர்த்தகத்தை ஊக்குவித்துப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். நகரத்தின் வரலாற்று முக்கியத்துவத்துவமும் விமான நிலையத்தின் திறனும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும், வணிகங்களை ஈர்க்கும் வகையில் உள்ளன.

 

(Release ID: 2237552)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2237837) आगंतुक पटल : 150
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam