சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

“இந்தியாவின் இளைஞர்களின் விருப்பம் நமது மிகப்பெரிய மூலதனம்”: மாற்றுத்திறனாளி திறன் திட்டம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் திரு மோடி விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAR 2026 9:11AM by PIB Chennai

மக்கள் பங்கேற்பின்  ஆற்றல்மிக்க  உதாரணமாக பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்குகளின் புதிய பாரம்பரியத்தை விவரித்த பிரதமர் திரு நரேந்திரமோடி, இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய பலம், கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெருநகரங்களைச் சேர்ந்த இளைஞர்களின் விருப்பங்களில் உள்ளது என்று கூறினார். அவர்கள் புதுமைகளை உருவாக்கி நாட்டின் எதிர்காலத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முயல்கின்றனர். புதுமை சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி இந்தியா நகரும்போது, இந்தத் திறனை வழங்க  நாடு அதன் கல்வி முறையை தொடர்ந்து நவீனமயமாக்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். லட்சக்கணக்கான பங்குதாரர்கள், நிபுணர்கள் மற்றும் பயனாளிகள் இந்த ஆலோசனைகளில் பங்கேற்று, மத்திய பட்ஜெட்டை செயல்படுத்துவதற்கு உத்வேகம் அளிக்கும் நடைமுறை யோசனைகள் மற்றும் தீர்வுகளை உருவாக்குகிறார்கள் என்றும்  பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் உண்மையான அளவுகோல், அது அதன் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எவ்வளவு திறம்பட அதிகாரம் அளிக்கிறது என்பதில் உள்ளது என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்  டாக்டர் வீரேந்திர குமார் வலியுறுத்தினார். மத்திய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளி திறன் திட்ட அறிவிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான திறன்களை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையைக் குறிக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார். திறன் மேம்பாடு உண்மையான மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்பு வாய்ப்புகளாக மாறுவதை உறுதி செய்வதற்கு அரசு, தொழில்துறை மற்றும் சிவில் சமூகம் இடையேயான கூட்டாண்மைகள் அவசியம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சந்தை தொடர்பான திறன்கள் சமூக விருப்பங்களை தொழில்துறை தேவையுடன் இணைத்து, அவற்றை முக்கிய கல்வி,ஸ்டெம் கற்றல் மற்றும் வேலைவாய்ப்பு சூழல் அமைப்புகளில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தினர். உள்ளடக்கிய பணியமர்த்தல், அணுகக்கூடிய பயிற்சி கருவிகள், தொழில்முனைவு, டிஜிட்டல் தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தொலைதூர வேலை வாய்ப்புகளின் முக்கியத்துவத்தை இந்த விவாதம் எடுத்துரைத்தது. மார்ச் 9 அன்று டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி திறன் திட்டம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கு, கிராமப்புறங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல் மற்றும் சிறப்பு மையங்கள் மூலம் சிறப்புத் தொழில் பயிற்சியுடன் தேவை சார்ந்த, தொழில்துறை சார்ந்த திறன் மேம்பாட்டு சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237299&reg=3&lang=1

 

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2237771) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , Gujarati , Kannada , हिन्दी , Bengali