புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இந்தியாவுக்கான பசுமை அமோனியா மற்றும் பசுமை மெத்தனால் தரநிலைகளை அரசு அறிவித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAR 2026 11:00AM by PIB Chennai
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு பசுமை அமோனியா மற்றும் பசுமை மெத்தனால் தயாரிப்புக்கான புதிய தரநிலைகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 2026 பிப்ரவரி 27 அன்று வெளியிடப்பட்டது. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இதை வெளியிட்டுள்ளது.
அமோனியா மற்றும் மெத்தனால் “பசுமை” தயாரிப்பாக கருதப்பட வேண்டுமெனில் பூர்த்தி செய்ய வேண்டிய வாயு வெளியீட்டு வரம்புகள் மற்றும் விதிமுறைகளை இந்தத் தரநிலைகள் குறிப்பிடுகின்றன. இவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து பெறப்படும் பசுமை ஹைட்ரஜனை பயன்படுத்தி தயாரிக்கப்பட வேண்டும்.
பசுமை அமோனியா தரநிலை:
பசுமை அமோனியா தயாரிப்பில் ஏற்படும் மொத்த பசுமைக் குடில் வாயு வெளியீடு ஒரு கிலோ அமோனியாவுக்கு 0.38 கிலோ கார்பன் டை ஆக்சைடு சமமதிப்பை மீறக்கூடாது. இந்த மதிப்பு கடந்த 12 மாத சராசரியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
பசுமை மெத்தனால் தரநிலை:
பசுமை மெத்தனால் தயாரிப்பில் ஏற்படும் மொத்த பசுமைக் குடில் வாயு வெளியீடு ஒரு கிலோ மெத்தனாலுக்கு 0.44 கிலோ கார்பன் டை ஆக்சைடு சமமதிப்பை மீறக்கூடாது. இதுவும் 12 மாத சராசரியாக கணக்கிடப்படும்.
பசுமை மெத்தனால் தயாரிக்க தேவையான கார்பன் டைஆக்சைடு, உயிரியல் மூலங்கள் அல்லது ஏற்கனவே உள்ள தொழில்துறை மூலங்களிலிருந்து பெறலாம். இந்த மூலங்களை அமைச்சகம் தேவைக்கேற்ப மாற்றலாம்.
அளவீடு, கண்காணிப்பு, அறிக்கை தயாரித்தல் மற்றும் சான்றிதழ் வழங்குதல் தொடர்பான விரிவான வழிமுறைகள் பின்னர் தனியாக வெளியிடப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பிற்கு முன்பு வெளியிடப்பட்ட டெண்டர்கள், அவை வெளியிடப்பட்ட காலத்தில் இருந்த விதிமுறைகளின் அடிப்படையில் தொடரும். ஆனால் தேவையான இடங்களில், இரு தரப்பினரின் ஒப்புதலுடன் புதிய விதிகளுடன் பொருந்திப் போகலாம்.
இந்தப் புதிய தரநிலைகள் உரத் துறை, கப்பல் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் கனரகத் தொழில்கள் போன்ற துறைகளில் கார்பன் வெளியீட்டை குறைக்க உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும், பசுமை எரிபொருள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236255®=3&lang=1
***
TV/PKV/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2236338)
வருகையாளர் எண்ணிக்கை : 16