மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

குடிமைப் பணிகள் தேர்வு 2025 முடிவுகள்

இடுகை இடப்பட்ட நாள்: 06 MAR 2026 3:48PM by PIB Chennai

2025 ஆகஸ்ட் மாதத்தில் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட குடிமைப் பணிகள் தேர்வு 2025-ன்  எழுத்துத் தேர்வு முடிவுகள், 2025 டிசம்பர், 2026 பிப்ரவரி ஆகிய மாதங்களில் நடத்தப்பட்ட ஆளுமைத் திறனுக்கான நேர்காணல்கள் அடிப்படையில் இந்திய ஆட்சிப்பணி, இந்திய வெளியுறவுச் சேவை, இந்திய காவல் பணி, மத்திய பணிகள் குரூப் “ஏ”, குரூப் “பி” ஆகியவற்றில் பணி நியமனம் செய்வதற்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 958 பேரில் பொதுப் பிரிவில், 317 பேரும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினரில் 104 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 306 பேரும் ஷெட்யூல்டு வகுப்பினரில் 158 பேரும் ஷெட்யூல்டு பழங்குடியினரில் 73 பேரும் தேர்வாகியுள்ளனர்.

சேவைகள்

பொது

இடபிள்யூ எஸ்

ஓபிசி

எஸ்சி

எஸ்டி

மொத்தம்

ஐஏஎஸ்

74

18

47

28

13

180

ஐஎஃப்எஸ்.

22

06

15

08

04

55

ஐபிஎஸ்

60

15

42

22

11

150

மத்திய சேவை குரூப்  ‘

211

48

141

73

34

507

குரூப்பிசேவைகள்

79

17

61

27

11

195

மொத்தம்

446

104

306

158

73

1087

 

மொத்தம் நியமனம் பெற்றவர்களில் 42 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர் 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235922&reg=3&lang=1

***

TV/SMB/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2236119) வருகையாளர் எண்ணிக்கை : 60
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Malayalam