இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கேலோ இந்தியா பழங்குடியின விளையாட்டுப் போட்டிகள் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

இடுகை இடப்பட்ட நாள்: 06 MAR 2026 1:10PM by PIB Chennai

கேலோ இந்தியா பழங்குடியின விளையாட்டுப் போட்டிகள் வாய்ப்புகள் மற்றும் நோக்கத்தை விரிவுபடுத்தும் ஒரு பகுதியாக அமைந்துள்ளது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இப்போட்டிகள் இம்மாதம் 26-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகள் முதல்முறையாக சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர், ஜக்தல்பூர் மற்றும் சர்குஜா நகரங்களில் நடைபெறும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

தடகளம், கால்பந்து, ஹாக்கி, பளுதூக்குதல், வில்வித்தை, நீச்சல், மல்யுத்தம் என 7 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

மேலும் மல்லர் கம்பம் மற்றும் கபடி ஆகிய 2 செயல் விளக்க விளையாட்டுகளும் இதில் இடம் பெறுகிறது. இப்போட்டியில் நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகள் இலட்சினை, பாடல், சின்னம் ஆகியவை கடந்த 2025 டிசம்பர் 23-ம் தேதி வெளியிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235848&reg=3&lang=1

***

TV/SV/RJ/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2236032) வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Malayalam