குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் மார்ச் 6 முதல் 7 வரை மேற்கு வங்கத்திற்குப் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAR 2026 6:30PM by PIB Chennai
இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2026 மார்ச் 6 முதல் 7 வரை மேற்கு வங்க மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பயணத்தின் முதல் நாளான மார்ச் 6 அன்று, 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் டார்ஜிலிங் மலைத் திருவிழாவைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, டார்ஜிலிங்கில் உள்ள லோக் பவனில் 'ரூட் அண்ட் ரிதம்ஸ்' (Root & Rhythms) என்ற கண்காட்சியைத் திறந்து வைக்கிறார். அதே நாளில், ஐஐடி கரக்பூரில் நடைபெறவுள்ள 'பெண்கள் தலைமை மற்றும் அதிகாரமளித்தல்' குறித்த பவள விழாக் கொண்டாட்ட முதன்மைத் திட்டத்தைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.
மார்ச் 7 அன்று, மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் சர்வதேச சந்தால் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள 9-வது சர்வதேச சந்தால் மாநாட்டில் குடியரசுத் தலைவர் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235684®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண்:2235684
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2235775)
வருகையாளர் எண்ணிக்கை : 78