குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவருடன் பின்லாந்து அதிபர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
05 MAR 2026 6:26PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை, பின்லாந்து அதிபர் திரு. அலெக்சாண்டர் ஸ்டப் இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். 'ரைசினா உரையாடல்' நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்கும் அவரை வரவேற்ற குடியரசுத் தலைவர், பின்லாந்தை இந்தியாவின் நம்பிக்கைக்குரிய பங்காளியாகக் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, புதுமைப் படைப்புகள், கல்வி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றால் வலுவடைந்துள்ளதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். அண்மையில் கையெழுத்தான இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இருதரப்பு முதலீடுகளுக்குப் புதிய வேகத்தை அளிக்கும் என திருமதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
6 ஜி மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்களில் பின்லாந்தின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், இந்தியாவின் பசுமை எரிசக்தி முயற்சிகள் மற்றும் 'லைஃப் மிஷன்' குறித்தும் எடுத்துரைத்தார். பின்லாந்தின் தொழில்நுட்பமும் இந்தியாவின் பசுமை கண்டுபிடிப்புகளும் இணைவது உலகளாவிய நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235682®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண்:2235682
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2235763)
आगंतुक पटल : 81