PIB Headquarters
நம்பிக்கை, பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவு
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAR 2026 9:57AM by PIB Chennai
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சுகாதாரப் பராமரிப்புத் துறையை பல்வேறு புதுமையான வழிகளில் மாற்றியமைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகள், நோய்களைக் கண்டறிந்து கணிக்க வகை செய்வதுடன், மருத்துவ நடைமுறைகளை நெறிப்படுத்தவும், மருத்துவமனை சார்ந்த நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தவும், மருந்து கண்டுபிடிப்புகளுக்கும், சுகாதாரப் பராமரிப்பு ஆராய்ச்சிப் பணிகளிலும் உதவிட முடியும். இருப்பினும், சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் உள்ள தடைகள் மற்றும் சவால்கள் உள்ளன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பாத்தால் இயங்கும் சுகாதாரப் பராமரிப்பு சாதனங்கள், உபகரணங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றின் பயன்பாடுகள் குறைவாக உள்ளது. பல்வேறு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சாதனங்களால் பெறப்படும் மாறுபட்டத் தரவுகளில் குறிப்பிடத்தக்க அளவிலான பற்றாக்குறை உள்ளது. இது அவற்றின் துல்லியத்தை வெகுவாகக் குறைப்பதுடன், சில நோயாளிகளுக்கு அவசியமற்றத் தரவுகளை அளிக்கலாம். செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த பல்வேறு விவாதங்களில், ஒரு தெளிவான ஒருமித்த கருத்து வெளிப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், சுகாதாரப் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும் வலிமையைக் கொண்டிருந்தாலும், அதன் வளர்ச்சி மற்றும் பயன்பாடு நோயாளியை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமாகும். இது மருத்துவ பராமரிப்பிற்கான சமநிலையையும், குறைந்த செலவில் அவை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும், பன்முகத்தன்மை கொண்ட, உள்ளடக்கிய தரவுத்தொகுப்புகளில் பயிற்சி பெற வேண்டியுள்ள நிலையில், மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையின் அடித்தளமாக அவை இருக்க வேண்டும்.
இதனைக் கருத்தில் கொண்டு, அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற இந்திய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டின் போது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்தியாவில் சுகாதாரப் பராமரிப்புக்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த வியூகத்தை வெளியிட்டது. இந்தியாவின் சுகாதாரக்க கட்டமைப்பில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பொறுப்பான ஒருங்கிணைப்பு நடைமுறைகளை வழிநடத்த ஏதுவாக, இந்தியாவிற்கான சுகாதாரக் கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான உத்திசார் தேசிய கட்டமைப்பு அவசியமாகிறது. இது மருத்துவ சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக அமையும். அதே நேரத்தில், அதன் பயன்பாடு மீதான பொது நலன், நம்பிக்கை மற்றும் நீண்டகால மீள்தன்மை போன்ற அம்சங்களில் உறுதியான செயல்பாடுகள் அவசியமாகிறது. இந்த உச்சிமாநாட்டின் போது, நடைபெற்ற பல்வேறு அமர்வுகளில், விவாதங்கள், தரவுகளில் பன்முகத்தன்மையின் முக்கியத்துவம், பொறுப்புணர்வு மற்றும் நம்பகத் தன்மையுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகளையும், பொது நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235388®=3&lang=1
***
TV/SV/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2235471)
வருகையாளர் எண்ணிக்கை : 68