பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

தில்லி, ஹரியானா, மகராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள 12 மாவட்டங்களில் மூன்று பல்தட திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 14 FEB 2026 12:50PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ரூ.18,509 கோடி செலவிலான ரயில்வே அமைச்சகத்தின் மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.

1.    கசாரா –மன்மட் 3-வது மற்றும் 4-வது வழித்தடம்

2.    தில்லி – அம்பாலா 3-வது மற்றும் 4-வது வழித்தடம்

3.    பெல்லாரி – ஹொசப்பேட் 3-வது மற்றும் 4-வது வழித்தடம்

ஆகியவை இந்த திட்டங்களாகும். வழித்தடங்கள் அதிகரிப்பது, போக்குவரத்து இணைப்பை கணிசமாக விரிவுபடுத்துவதோடு, இந்திய ரயில்வேயின் செயல்பாட்டுத் திறனையும் சேவை நம்பகத்தன்மையையும் மேம்படுத்தும்.

தில்லி, ஹரியானா, மகராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள 12 மாவட்டங்களில் மூன்று பல்தட திட்டங்கள் மூலம் தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் வலைப்பின்னலில் சுமார் 389 கி.மீ அதிகரிக்கும்.

உத்தேச பல்தட திட்டம் சுமார் 97 லட்சம் மக்கள்தொகை கொண்ட சுமார் 3,902 கிராமங்களின் போக்குவரத்து இணைப்பை விரிவுப்படுத்தும்.

இந்தத் திட்டங்களில் உள்ள வழித்தடங்கள் மூலம் நிலக்கரி, எஃகு, இரும்புத் தாது, சிமெண்ட், சுண்ணாம்புக் கல் / பாக்சைட், சரக்குப் பெட்டகம், உணவு தானியங்கள், சர்க்கரை போன்றவற்றிற்கான போக்குவரத்திற்கு முக்கியமானதாக இருக்கும்.    

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227978&reg=3&lang=2

 

TV/SMB/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2235346) வருகையாளர் எண்ணிக்கை : 41