பிரதமர் அலுவலகம்
இஸ்ரேல் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 9:00PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெருசலேமில் இஸ்ரேல் அதிபர் மேதகு திரு ஐசக் ஹெர்சாக்கை சந்தித்துப் பேசினார்.
2017 ஆம் ஆண்டு இஸ்ரேல் பயணத்தின் போதும், 2023 ஆம் ஆண்டு துபாயிலும் அதிபர் திரு ஹெர்சாக் உடனான தனது முந்தைய சந்திப்புகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்திய-இஸ்ரேல் உறவுகளை "அமைதி, புதுமை மற்றும் செழிப்புக்கான சிறப்பு உத்தி சார்ந்த கூட்டாண்மையாக” உயர்த்துவது, இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நம்பிக்கை, பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள் மற்றும் சிறப்பு வாய்ந்த நட்பை இது பிரதிபலிக்கிறது என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், புதுமை மற்றும் தொழில்முனைவு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.
இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர். காசா அமைதித் திட்டத்திற்கு ஆதரவை தெரிவித்த பிரதமர், மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தனது திருப்தியை வெளிப்படுத்தினார்.
சுற்றுச்சூழலை வளர்ப்பதில் இரு நாடுகளின் பொதுவான மாண்புகளை பிரதிபலிக்கும் ஒரு சிறப்பு அடையாளமாக, அதிபர் திரு ஹெர்சாக் மற்றும் முதல் பெண்மணியுடன் இணைந்து, தாயின் பெயரில் ஒரு மரம் நடுதல் முயற்சியின் கீழ் அதிபரின் தோட்டத்தில் பிரதமர் மரக்கன்றை நட்டார்.
இந்திய-இஸ்ரேல் கூட்டாண்மைக்கு அளித்த ஆதரவிற்கும், அன்பான விருந்தோம்பலுக்கும், அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
***
(Release ID: 2233271)
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2235331)
வருகையாளர் எண்ணிக்கை : 21
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam