பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இந்திய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மொரீஷியஸ் பிரதமர் டாக்டர் நவின்சந்திர ராம்கூலத்துடன் பிரதமர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2026 10:13PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 20) புதுதில்லியில் நடைபெற்ற இந்திய செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக மொரீஷியஸ் பிரதமர் டாக்டர் நவின்சந்திர ராம்கூலமை சந்தித்து பேசினார். கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டதையடுத்து, அந்நாட்டு பிரதமர் டாக்டர் ராம்கூலம் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். அண்மையில் பிப்ரவரி 09, 2026 அன்று நடைபெற்ற தொலைபேசி வழி பேச்சுவார்த்தையை அடுத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.

வர்த்தகம், முதலீடு, கடல்சார் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, டிஜிட்டல் ஒத்துழைப்பு போன்ற பல்வேறு துறைகளில் உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களில் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் செயற்கை நுண்ணறிவு, புதுமை கண்டுபிடிப்புகள் போன்ற துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பரஸ்பரம் இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

மொரீஷியஷ் நாட்டின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தியா அளித்து வரும் சிறப்பு பொருளாதார தொகுப்பை நீட்டிப்பது குறித்து விவாதித்தனர். இந்தியாவின் வளர்ச்சி சார்ந்த நட்புறவிற்கு மொரிஷியஸ் ஒரு முன்மாதிரி நாடாக திகழ்கிறது என்றும், இது பரஸ்பரம், நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புணர்வை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231033&reg=3&lang=2

***

TV/SV/RK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2235302) வருகையாளர் எண்ணிக்கை : 34