பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் உரையாடினார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAR 2026 11:30PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர், தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். இந்த கடினமான காலங்களில் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இந்தியா துணை நிற்கும் என்று அவர் கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்திய சமூகத்தின் நலனில் அக்கறை செலுத்துவதற்காக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார். மேலும், பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைத்து, அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை நிலைநாட்டுவதை இந்தியா ஆதரிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேசினேன். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்ததுடன், அந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தேன். இந்தக் கடினமான காலங்களில் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குத் துணை நிற்கிறது.

 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழும் இந்திய சமூகத்தினரின் நலனின் அக்கறை செலுத்துவதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். பதற்றத்தைக் குறைத்து, பிராந்திய அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் நடவடிக்கைகளை இந்தயா ஆதரிக்கிறது.

***

(Release ID:  2234323)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2235289) வருகையாளர் எண்ணிக்கை : 48