பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரோல்ஸ் - ராய்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 FEB 2026 10:24PM by PIB Chennai

ரோல்ஸ்- ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு துஃபான் எர்ஜின்பில்ஜிக், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார். “இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திரு மோடி, ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் இந்தியாவில் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது மற்றும் நமது புதிய கண்டுபிடிப்பு, சக்திமிக்க இளையோருடன் கூட்டாண்மையை மேற்கொள்வதற்கான ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.”

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“ரோல்ஸ்- ராய்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு துஃபான் எர்ஜின்பில்ஜிக் உடனான இன்றைய சந்திப்பு சிறப்பாக இருந்தது.

ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் இந்தியாவில் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது மற்றும் நமது புதிய கண்டுபிடிப்பு, சக்திமிக்க இளையோருடன் கூட்டாண்மையை மேற்கொள்வதற்கான ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம்”       

***

(Release ID: 2226734)

AD/IR/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2235025) வருகையாளர் எண்ணிக்கை : 60