மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
புதுதில்லியில் நடைபெற்ற இந்தியாவில் கல்வி பயிலுதல் – தூதரக மாநாடு 2026-ல் 50 நாடுகளின் தூதர்களிடையே திரு தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 MAR 2026 3:14PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் இன்று நடைபெற்ற இந்தியாவில் கல்வி பயிலுதல் – தூதரக மாநாடு 2026-ல் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் உரையாற்றினார். இந்த மாநாட்டில் 50-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், துணை தூதர்கள், தூதரகங்களின் பிரதிநிதிகள், கல்வி அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர். உயர்கல்வியில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய திரு தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தியாவின் கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். கல்வியை சர்வதேச மயமாக்குவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் பற்றியும், கல்வியில் தரம், புதிய கண்டுபிடிப்பு, குறைந்த செலவு ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்துவது பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.
தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் இந்தியாவில் பயிலுங்கள் முன்முயற்சி மூலம் மாணவர்கள், ஆய்வாளர்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு உலகளாவிய பாதைகளை இந்தியா விரிவுபடுத்தியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
மாநாட்டில் பேசிய உயர்கல்வித்துறை செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு, வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் வளாகங்களை இந்தியாவில் அமைக்க வெளிப்படைத்தன்மையுடனும் காலவரம்புடனும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை உருவாக்கியிருப்பதாக கூறினார். ஒரு மாதத்திற்குள் ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றின் முன்னணி கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234498®=3&lang=1
-----
TV/SMB/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2234615)
வருகையாளர் எண்ணிக்கை : 10