நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

இயற்கை வேளாண்மையில் மாநிலங்களுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் தேசிய பயிலரங்கை நித்தி ஆயோக் நடத்தியது

प्रविष्टि तिथि: 02 MAR 2026 2:13PM by PIB Chennai

இயற்கை வேளாண்மையில் மாநிலங்களுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் தேசிய பயிலரங்கை நித்தி ஆயோக் நடத்தியது. இந்தப் பயிலரங்கில் நாடு முழுவதிலுமிருந்து விவசாயிகள், கொள்கை வகுப்போர், விஞ்ஞானிகள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இயற்கை வேளாண்மை நடைமுறைகள் குறித்த பயிற்சிக் கையேடுகள், இந்த பயிலரங்கில் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்பட்டன.

இந்தப் பயிலரங்கில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ்ரத், காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றினார். நீடித்த விவசாயிகளை மையப்படுத்திய வேளாண் நடைமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், மண்வளம், இடுபொருள் செலவுக் குறைப்பு, விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றில் இயற்கை விவசாயத்தின்  பங்கு குறித்து பேசினார்.

இயற்கை வேளாண்மைக்கு நிறுவன ஆதரவு கிடைப்பதோடு செயல்பாடு, சான்றளிப்பு, சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளித்தல், களத்தில் காணப்படும் சவால்கள் போன்றவை குறித்து விவசாயிகளின் பங்கேற்பாளர்களும் விவாதம் நடத்தினர். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234472&reg=3&lang=1  

-----

TV/SMB/KPG/KR


(रिलीज़ आईडी: 2234612) आगंतुक पटल : 92
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Telugu , Kannada