மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இந்திய செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டின் மூலம் பெரும் முதலீடு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 02 MAR 2026 10:09AM by PIB Chennai

2026 பிப்ரவரி 16 முதல் 21 வரை நடைபெற்ற இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026 உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சூழலில் சிறப்புமிக்க மைல் கல்லாக அமைந்தது. இந்த உச்சிமாநாட்டில் நேரடியாக சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். நேரடி மெய்நிகர் காட்சி வாயிலாக 9 லட்சத்திற்கும் மேற்பட்ட கருத்துக்கள் பெறப்பட்டது. இந்த உச்சிமாநாட்டில் 100-க்கும் அதிகமான நாடுகள் மற்றும் 20 சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த உச்சிமாநாட்டின்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது தொடர்பான இயக்கத்தில் 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றது, இந்தியாவின் கின்னஸ் உலக சாதனையாக அமைந்தது.

இந்த உச்சிமாநாட்டின் மூலம், உள்கட்டமைப்பு, வன்பொருள், செயலிகள் போன்ற துறைகளில் 200 பில்லியனுக்கும் மேலான அமெரிக்க டாலர் அளவிற்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த உள்கட்டமைப்புத் துறையில், 7 ஆண்டுகளில் 110 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உறுதி ஏற்றுள்ளது. 2035-ம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதானி எண்டர்பிரைஸஸ் நிறுவனம் அறிவித்தது.

செயற்கை நுண்ணறிவு தயார் தரவு மையங்களுக்காக டாடா குழுமம் ஓபன் ஏ.ஐ நிறுவனத்துடன் கூட்டாண்மையை அறிவித்துள்ளது.

***

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234343&reg=3&lang=1

TV/IR/LDN/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2234527) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada