பிரதமர் அலுவலகம்
தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 MAR 2026 8:50AM by PIB Chennai
நாட்டின் இளைஞர்களின் வலிமையை எடுத்துரைக்கும் செய்தியில் பிரதமர், தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்துள்ளார்.
இந்திய இளையோர் சக்தியின் உறுதிப்பாடு ஒப்பிட முடியாதது என்றும் பிரதமர் கூறியுள்ளார். நமது இளைய நண்பர்கள் தாங்கள் செய்ய நினைத்ததையெல்லாம் சாதிப்பதன் மூலம் நாட்டின் கனவுகள் தற்போது நிறைவேறி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:
"भारतवर्ष की युवाशक्ति का दृढ़ संकल्प अतुलनीय है। हमारे युवा साथी जो ठान लेते हैं, वो करके दिखाते हैं। यही वजह है कि आज हमारा देश अपने सपनों को साकार कर रहा है।
न वा उ मां वृजने वारयन्ते न पर्वतासो यदहं मनस्ये।
मम स्वनात् कृधुकर्णो भयात एवेदनु द्यून्किरणः समेजात्।।"
ஆழ்ந்த உறுதி உங்கள் தன்னம்பிக்கையின் சக்தியாகும். உங்களுடைய சுய உறுதிப்பாடை எவரும் சிதைக்க முடியாது.
ஒரு பெரிய மலை அளவிலான பெரும் தடைகள் கூட உங்கள் பாதையைத் தடுக்க இயலாது. உங்களுக்கு மனஉறுதி இருந்தால் நீங்கள் சூரியனை விட கூடுதல் சக்தி வாய்ந்தவராக இருப்பீர்கள்.
***
Release ID: 2234327
AD/IR/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2234526)
வருகையாளர் எண்ணிக்கை : 6