பிரதமர் அலுவலகம்
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார்
प्रविष्टि तिथि:
01 MAR 2026 7:36PM by PIB Chennai
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.03.2026) வருகை தந்து பிரார்த்தனை செய்தார்.
கோயிலுக்கு வருகை தந்த பிரதமர், நாட்டு மக்களின் அமைதி, செழிப்பு, நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்து ஆசீர்வாதங்களை வேண்டினார். முருகக் கடவுள் நம்மை வலிமை, தைரியம், ஞானம் ஆகியவற்றுடன் தொடர்ந்து வழிநடத்துவார் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என்ற பிரார்த்தனையுடன் பிரதமர் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வழிபாடு நடத்தினேன்.
அனைவரின் அமைதி, செழிப்பு, நல்வாழ்வுக்காக ஆசீர்வாதங்களை வேண்டினேன். முருகக் கடவுள் எப்போதும் வலிமை, தைரியம், ஞானம் ஆகியவற்றுடன் நம்மை வழிநடத்தட்டும்."
***
(Release ID: 2234272)
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2234283)
आगंतुक पटल : 92
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam