குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

கேரள மாநிலம் திருச்சூரில் சேதனா கானாஸ்ரமத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் அடிக்கல் நாட்டினார்

இசை நமது நாகரிகத்தில் கலந்துள்ளது: குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்

प्रविष्टि तिथि: 01 MAR 2026 1:24PM by PIB Chennai

கேரள மாநிலம் திருச்சூரில், அனைத்து மதத்தினருக்கும் ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சேதனா கானாஸ்ரமம் என்ற கலாச்சார, இசை வளாகத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (01.03.2026) அடிக்கல் நாட்டினார். சேதனா கானாஸ்ரம் என்பது குரியகோஸ் எலியாஸ் சேவை சங்கத்தின் ஒரு திட்டமாகும். திருச்சூரில் உள்ள சிஎம்ஐ தேவமாதா பொதுப் பள்ளியின் முன்முயற்சியாகும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வளமான இசை பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றார். பாரதத்தின் இசை வெறும் ஒலி மட்டுமல்ல எனவும் அது ஒரு ஆன்மீக பயணம், தியானம், பிரார்த்தனை, வாழ்க்கையின் கொண்டாட்டம் அனைத்தும் கலந்தது என்றும் அவர் கூறினார். இசை என்பது பாரதத்தின் பழங்கால நாகரிக ஆன்மாவின் தூய்மையான வெளிப்பாடு என்றும், அது கோடிக் கணக்கான இதயங்களை ஒரே தாளத்தில் இணைக்கும் சக்திவாய்ந்த இணைப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய இசையின் நாகரிக ஆழத்தை எடுத்துரைத்த அவர், வேதங்களின் பாடல்கள் முதல் இசை தேசம் முழுவதும் பாய்ந்துள்ளது என்று குறிப்பிட்டார். இசை நமது நாகரிகத்தில் பிரிக்க முடியாதபடி கலந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் உட்பட, தென்னிந்தியாவின் துடிப்பான இசை கலாச்சாரத்தின் வரலாற்று ஆதாரங்களையும் குடியரசுத் துணைத் தலைவர் மேற்கோள் காட்டினார். தேவாரம் போன்ற புனித பாடல்கள் கோயில்களில் தொடர்ந்து பாடப்படுகின்றன எனவும் இது பாரதத்தின் இசை பாரம்பரியத்தின் நிலையான தன்மையை நிரூபிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் பல்வேறு இசை மரபுகளைப் பற்றியும் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.

விழாவில் கேரள ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்; மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி, கேரள அரசின் உயர்கல்வி அமைச்சர் டாக்டர் ஆர். பிந்து, திருச்சூர் மாநகராட்சி மேயர் டாக்டர் நிஜி ஜஸ்டின், திருச்சூர் பேராயர் மார் ஆண்ட்ரூஸ் தாசத், சேதனா கானா ஆசிரம செயல் இயக்குநர் டாக்டர் பால் பூவத்திங்கல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234142&reg=3&lang=1   

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2234229) आगंतुक पटल : 79
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Malayalam