ஆயுஷ்
தேசிய ஆரோக்கியத் திருவிழா ஷெகானில் நிறைவடைந்தது - நான்கு நாள் தேசிய ஆரோக்கிய கண்காட்சியில் பெருமளவிலான பொதுமக்கள் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 MAR 2026 9:31AM by PIB Chennai
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தின் ஷெகானில் அகில இந்திய ஆயுர்வேத கூட்டமைப்புடன் இணைந்து ஆயுஷ் அமைச்சகத்தால் 2026 பிப்ரவரி 25 முதல் 28 வரை ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு நாள் தேசிய ஆரோக்கிய கண்காட்சி 2026, நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. பாரம்பரிய மருத்துவ முறைகள் மூலம் முழுமையான சுகாதாரம் மற்றும் கிராமப்புற அதிகாரமளிப்புக்கான நாட்டின் நோக்கத்தை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தக் கண்காட்சி, சுகாதாரப் பராமரிப்பு, அறிவியல் உரையாடல், விவசாயிகள் ஈடுபாடு பொதுமக்கள் பங்கேற்பு ஆகியவற்றின் துடிப்பான சங்கமமாக அமைந்தது. நான்கு நாட்களில், புல்தானா மற்றும் பரந்த விதர்பா பகுதியைச் சேர்ந்த மக்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், மாணவர்கள், ஆயிரக்கணக்கான விவசாயிகளின் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இலவச சுகாதார சேவைகள், அறிவியல் ஈடுபாடு, யோகா போட்டிகள் ஆகியவை இதில் இடம்பெற்றன. நல்வாழ்வுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுப்பதற்கு இந்தக் விழாவும் ஒரு பங்களிப்பை வழங்கியது.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234104®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2234147)
வருகையாளர் எண்ணிக்கை : 9