சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம், ஜியோ பார்சி ஆலோசனைக் குழுவின் 2-வது கூட்டத்தை மும்பையில் நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
28 FEB 2026 3:15PM by PIB Chennai
ஜியோ பார்சி ஆலோசனைக் குழுவின் 2-வது கூட்டம் இன்று (28.02.2026) மும்பையில் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சந்திர சேகர் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களின் சிறுபான்மை நலத் துறைகளின் பிரதிநிதிகள், பார்சி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தேசிய சிறுபான்மையினர் நிதிக் கழகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் போது, பார்சி மக்கள்தொகை வீழ்ச்சிக்கான காரணிகள், சமூக-பொருளாதார சவால்கள், மாறிவரும் சமூக முறைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. ஒருங்கிணைந்த கொள்கை ஆதரவு, சமூக பங்கேற்பு மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் பகிர்ந்து கொண்டனர்.
நீண்டகால சமூக நிலைத்தன்மையை உறுதி செய்வதில் பொருளாதார அதிகாரமளிப்பின் முக்கியத்துவத்தை சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் செயலாளர் எடுத்துரைத்தார். பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், அரசு வழங்கும் சலுகைக் கடன்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233899®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2233950)
வருகையாளர் எண்ணிக்கை : 24