குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ‘வாயு சக்தி–2026’ பயிற்சியை குடியரசுத்தலைவர் நேரில் பார்வையிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 FEB 2026 8:46PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 27, 2026) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் நடைபெற்ற 'வாயு சக்தி–2026' பயிற்சியைப் பார்வையிட்டார். நேரடி, ஒருங்கிணைந்த போர் செயல்பாட்டைக் காட்சிப்படுத்தும் கட்டமைப்பை வாயு சக்தி  பின்பற்றியது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய விமானப்படையின் துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை சிறப்பை வாயு சக்தி-2026 வெளிப்படுத்தியது. உருவகப்படுத்தப்பட்ட போர்க்கால சூழ்நிலைகளில் விரைவான மற்றும் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளும் திறனை நிரூபிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது. பல்வேறு போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இந்தப் பயிற்சியில் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கின.

தொழில்நுட்பம், ஒருங்கிணைப்பு மற்றும் விரைவான பதிலளிப்பு திறன்களின் ஒருங்கிணைந்த செயல்விளக்கமாகவும் 'வாயு சக்தி–2026' விளங்குகிறது. இந்தப் பயிற்சி பகல் மற்றும் இரவு சூழ்நிலைகளில் போர் நடவடிக்கைகளுக்கான தயார்நிலையைக் காட்சிப்படுத்தியது. பன்முக படையாகவும், தேசியத் தடுப்புக்கான முக்கிய தூணாகவும் இந்திய விமானப் படையின்  தயார்நிலையை வாயுசக்தி-2026 மீண்டும் உறுதிப்படுத்தியது.

***

(Release ID: 2233725)

TV/BR/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2233806) வருகையாளர் எண்ணிக்கை : 88
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu , Kannada , Malayalam