உள்துறை அமைச்சகம்
பீகார் மாநிலம் அராரியில் எஸ்எஸ்பி வீரர்களுடன் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கலந்துரையாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 4:40PM by PIB Chennai
பீகார் மாநிலம் அராரியாவில் உள்ள சஷாஸ்திர சீமா பால் வீரர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் இன்று கலந்துரையாடினார். மேலும் லெட்டி மற்றும் இந்தர்வா போன்ற எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையங்களை அவர் திறந்து வைத்தார். எஸ்எஸ்பி படை பிரிவுக்கான பல்வேறு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய், பீகார் மாநில துணை முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி, மத்திய உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர் மற்றும் எஸ்எஸ்பி படை பிரிவின் தலைமை இயக்குநர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, சஷாஸ்திர சீமா பால் வீரர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.170 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியா-நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதிகளில் சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ், 554 கிலோ மீட்டர் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 18 பிரிவுகளில் 14 பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233112®=3&lang=1
***
AD/SV/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2233208)
வருகையாளர் எண்ணிக்கை : 10