புவி அறிவியல் அமைச்சகம்
2026 மார்ச் 03 அன்று முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது; இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் கிரகணத்தை காண முடியும்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 3:51PM by PIB Chennai
முழு சந்திர கிரகணம் 2026 மார்ச் 03 , 2026 அன்று நிகழவுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியின் சில இடங்களைத் தவிர, இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் இந்த கிரகணம் தெரியும். கிழக்கு ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் பெருங்கடல் பகுதி, அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த கிரகணம் தெரியும்.
இந்திய நேரப்படி இந்த கிரகணம் இந்திய நேரப்படி மாலை 3 மணி 20 நிமிடத்திற்கு தொடங்கி மாலை 6 மணி 48 நிமிடத்திற்கு முடிவடைகிறது. இந்தியாவில் தெரியும் வகையில் அடுத்த சந்திர கிரகணம் ஜூலை 6, 2028 அன்று நிகழும். அது ஒரு பகுதி சந்திர கிரகணமாக நிகழும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233077®=3&lang=1
***
TV/PLM/RK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2233205)
வருகையாளர் எண்ணிக்கை : 159